கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 6 தொகுதியில் போட்டியிட்ட விசிக 4 தொகுதிகளில் வென்றது. விசிகவுக்கு சட்டமன்ற தொகுதி வாரியாக எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்று ஆதவ் ஆர்ஜூன் டீம் ஒரு சர்வே எடுத்து வருகிறது. விசிகவின் வாக்கு வங்கி கடந்த காலங்களில் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் 25 தொகுதிகளை கேட்க விசிக முடிவு எடுத்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.