கர்நாடக மாநிலம் கோலார் தாலுகாவில் உள்ள பங்கராபேட்டையில் உள்ள மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ராஜ்குமார் என்ற நபருக்கு சொந்தமான அந்த கட்டிடத்தின் கீழ்தளத்தில் சீரமைப்பு பணியின் போது இடிந்து விழுந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கட்டிடம் இடிந்து விழுவதற்கு முன்பு உள்ளே சிக்கியிருந்த மூன்று குடும்பங்களை தீயணைப்பு படையினர் மீட்டனர். இடிந்து விழுந்ததில் அதன் எதிரே உள்ள தனியார் பள்ளி வளாகமும் சேதமடைந்தது.