அடுத்த தேர்தலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காணாமல் போய் விடுவார் என எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், 2025 அக்டோபருக்குள் நடக்கவிருக்கும் தேர்தலில் ட்ரூடோ கடும் பின்னடைவை சந்திப்பார். 2013ல் இருந்து லிபரெல் கட்சியை வழிநடத்தி வரும் ட்ரூடோவுக்கு இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமான பரிசோதனை என்றார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக எலான் மஸ்க் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.