தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை மாற்றக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் கோட்டாங்கரை 20க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் சந்தித்துள்ளனர். அவரிடம் செல்வப் பெருந்தகையை மாற்றக் கோரி புகார் மனு அளித்துள்ளனர். மேலும், அவர்கள் அனைவரும் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோரையும் சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.