தை அமாவாசையையொட்டி அம்மா மண்டபத்தில் குவிந்த பொதுமக்கள்

50பார்த்தது
இன்று தை அமாவாசை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி அம்மாமண்டபம் படித்துறையில் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி புனிதநீராடினர், தொடர்ந்து எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் போன்ற பிதுர்கர்மாக்களை செய்தனர். பலர் அன்னதானம் போன்ற அறச் செயல்களிலும் ஈடுபட்டனர். இதனால் மூதாதையர்கள் பசியும், தாகமும் விலகி நமக்கு ஆசி வழங்குவர் என்பது நம்பிக்கை. 

தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை தொடங்கி மாலை வரை மாம்பழச்சாலை முதல் ஸ்ரீரங்கம் வரை மக்கள் கூட்டம் அதிகமிருந்தது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தை அமாவாசை என்பதால் இன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் உள்பட திருச்சி மற்றும் சுற்றுப்பகுதி முக்கிய கோவில்களில் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது.

தொடர்புடைய செய்தி