கடலூர்: திமுக கவுன்சிலர் மீது திமுக நகர்மன்ற துணைத் தலைவர் காரித்துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், திமுக கவுன்சிலர் தனபால் தனது வார்டில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில், நகர்மன்ற துணைத் தலைவரும், திமுக நகரச் செயலாளருமான பரமகுரு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, பரமகுரு தனபால் மீது காரித்துப்பினார்.