முசிறியில் 2025 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு அனைத்து கட்சியினர் பங்கேற்றனர். திருச்சி மாவட்டம், முசிறி மற்றும் துறையூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் முசிறி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ ஆரமுத தேவசேனா தலைமை வகித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி முசிறி சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 60 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 834 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 23 பேரும் ஆக மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 917 வாக்காளர்களும், துறையூர் தனித்தொகுதியில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 574 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 384 பெண் வாக்காளர்களும், 34 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 172 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட், சிபிஐ, விசிக , உள்ளிட்ட கட்சி பிரமுகர்களும், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் உடன் இருந்தனர்.