மணச்சநல்லூர் - Manachanallur

காதலித்த பெண்ணின் தந்தையை தாக்கிய இளைஞர்

காதலித்த பெண்ணின் தந்தையை தாக்கிய இளைஞர்

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு அய்யம்பாளையத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவருடைய மகள்மீது காதல் இருந்து வந்ததாகவும், அதற்கு மாரியப்பன் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் சம்பவம் நடந்த நேற்று(செப்.19) மாரியப்பனை கைகளால் தாக்கி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் காயமடைந்த மாரியப்பன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அவரை தாக்கிய விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా