ஆடி வெள்ளியை முன்னிட்டு சமயபுரத்தில் குவிந்த பக்தர்கள்

74பார்த்தது
சக்தி கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் சமயபுரம் மாரியம்மன் கோயிலாகும். இக்கோயிலில் இன்று ஆடி மாதத்தில் வரும் இறுதி வெள்ளிக்கிழமை என்பதால் பல மாவட்டங்களில் இருந்து பெண்கள் விரதமிருந்து நடைபயணமாக சமயபுரம் கோயில்களுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு வந்தடைந்தனர்.
அப்படி வந்த பக்தர்கள் கோயிலை வெளி வளாகம், முடிகாணிக்கை மண்டபம், அன்னதானம் மண்டபத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி கும்மி அடித்து தங்களின் மகிழ்ச்சியான பக்தியை வெளிப்படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5 30 மணியளவில் நடை திறந்ததும் பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் தீச்சட்டி, பால்குடம், தீர்த்தக்குடம், கரும்பு தொட்டில், துலாபாரம், மற்றும் அழகு குத்தியும் நேர்த்திகடனை செல்லுத்தி சுமார் இரண்டு மணிநேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஆடி முதல் வெள்ளி முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததால் கோயிலில் திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கோயில் இணை ஆணையர் பிரகாஷ் உத்தரவின்படி கோயில் பணியாளர்கள் மற்றும் சமயபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி