
திருச்சி: 27 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திருச்சி மாநகராட்சி நகர் நல அலுவலர் விஜய சந்திரன் உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுக்க காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள 37 கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பாலமுருகன் டேவிட் ஆகியோர் சோதனை நடத்தினர். அதில் 27 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர்கள் 13 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 31,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.