திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று(செப்.3) காலை கோலாலம்பூர் மற்றும் ஷார்ஜாவிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவர்களிடம் ரூபாய் 9 லட்சத்து 43 ஆயிரம் மதிப்புள்ள 200 பாக்கெட் கோல்ட் ஃபிளாக் சிகரட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.