மீண்டும் அரசியல் கேள்வி.. கடுப்பான ரஜினி

56பார்த்தது
சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்திடம், வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் யாரெல்லாம் கலந்துகொள்வார்கள்? என கேட்கப்பட்டது. அதற்கு, “சரியாக தெரியவில்லை” என பதிலளித்தார். தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதைக் கேட்டு கடுப்பான ரஜினி, “என்னிடம் அரசியல் கேள்விகள் கேட்காதீர்கள் என சொல்லியிருக்கேன்” என கூறிவிட்டுச் சென்றார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி