ஆசியாவைத் தாக்கிய மிக வலுவான யாகி புயல் விட்டுச்சென்ற அழிவால், கிட்டத்தட்ட 6 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நலம் ஆபத்தில் உள்ளது, அவர்களின் கல்வி தடைபட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் வியட்நாம், மியான்மர், லாவோஸ், தாய்லாந்தைச் புரட்டிப்போட்டுள்ளன. 850க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் 550க்கும் மேற்பட்ட சுகாதார மையங்கள் சேதமடைந்துள்ளன. தூய குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.