தங்கத்தின் விலை நேற்று (செப்.19) சவரன் ரூ.54,600க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (செப்.20) சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.55,080க்கும், கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.6,885க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.49 அதிகரித்து ரூ.5640க்கும், ஒரு சவரன் ரூ.45,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.97.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.97,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.