திருச்சி: இஸ்ரேல் பாலிஸ்தான் போரை நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரில் உள்ள காதிகிராப்ட் அருகே ம. கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா, இ. கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவா, மாசிஸ்ட்லெனின் மாநில குழு உறுப்பினர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேல் பாலிஸ்தான் போரை உடனே நிறுத்த வேண்டும், இந்திய அரசு இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்ட உரையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணை செயலாளர் மு. வீரபாண்டி வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாசிஸ்ட்லெனின் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஞானதேசிகன், மாமன்ற உறுப்பினர் சுரேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீதர், சி. ஐ. டி. யூவின் மாவட்ட செயலாளர் ரங்கராஜன், லெனின் உட்பட 150 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.