ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் சேது எக்ஸ்பிரஸ் இன்று (செப்.18) நள்ளிரவு 1. 10மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பின்புறம் உள்ள மூன்று பெட்டிகள் கழன்று பின்புறமாக செல்ல துவங்கியது. இதனை சற்றும் எதிர்பார்க்காத பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இ
தனையடுத்து சுமார் 50 மீட்டர் தூரம் சென்ற பெட்டிகள் தானாகவே நின்றது. இதனைத்தொடர்ந்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து பெட்டிகளை இணைந்தனர். இதன் காரணமாக சேது எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.