திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அபுதாபியில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் இன்று வந்தது. இதில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த ஒரு பயணியின் உடமைகளில் சோதனை செய்ததில் உரிய அனுமதியின்றி கொண்டு வந்த ரூ. 1, 90, 000 மதிப்புள்ள 95 பாக்கெட் சிகரெட்டுகளை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்