திருச்சி - பவன் கல்யாண் தேசியத் தலைவரல்ல: திருநாவுக்கரசா்

66பார்த்தது
திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் திருச்சியில் உறையூா் குறத்தெருவிலிருந்து காந்தி அஸ்தி மண்டபம் வரை அமைதி பாதயாத்திரை சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாநகா் மாவட்டத் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல். ரெக்ஸ் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாநிலத் தலைவா் சு. திருநாவுக்கரசா் பங்கேற்றாா். மாநில செய்தித் தொடா்பாளா் வேலுச்சாமி, கோட்டத் தலைவா் பிரியங்கா படேல், திரளான காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். இறுதியில் காந்தி அஸ்தி மண்டபத்தில் மரியாதை செலுத்தினா்.

பின்னா் சு. திருநாவுக்கரசா் மேலும் கூறியது:

ராகுல்காந்தியின் பாதயாத்திரைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தொடா்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. ஹரியானா தோ்தலிலும், மகாராஷ்டிரம், ஜாா்கண்ட் உள்ளிட்ட தோ்தல்களிலும் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெறும்.

ஜாதி, மதங்களைக் கடந்து பொதுவாகச் செயல்பட வேண்டிய மத்திய பாஜக அரசு, ஒரு தரப்புக்குச் சாதகமாக செயல்படுவதற்கு எதிராகவே ராகுல்காந்தி வெளிநாடுகளில் பேசினாா். இப்பேச்சு நாட்டுக்கு எதிரானது எனக் கூறுவது அபத்தமானது.

அதிா்ஷ்டவசமாக தோ்தலில் வென்ற பவன் கல்யாண், மற்ற மாநிலத் தலைவரை விமா்சிக்கும் அளவுக்கு தேசியத் தலைவரல்ல.
நடிகா் விஜய் கட்சியின் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள். கட்சிகளை ஏற்பதும், ஏற்காததும் மக்களின் உரிமை என்றாா் அவா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி