லால்குடி - Lalgudi

மேலப்புதூர் சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீர்

திருச்சி மாநகரில் இதுவரை இல்லாத வகையில் நேற்று இரவு ஒரே நாளில் மழை கொட்டி தீர்த்தது. இதனால், மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் சாக்கடைகளில் இருந்து கழிவுநீரும் வெளியேறி மழை தண்ணீருடன் கலந்து வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. மலைக்கோட்டை, சத்திரம் பேருந்து நிலையம், பெரிய கடை வீதி, ஜங்ஷன், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை இரவு விடிய விடிய விடாமல் பெய்து கொண்டே இருந்தது. பலத்த மழையால் திருச்சி மேலப்புதூர் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்க தொடங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களுக்கு இடையே வாகனங்களை ஓட்டிச் சென்றனா். இடைவிடாது பெய்த மழையால் மாநகர மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా