தூத்துக்குடி: கஞ்சா வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டாஸ்!
ஓட்டப்பிடாரம் |

தூத்துக்குடி: கஞ்சா வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டாஸ்!

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு‌. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி புதுக்கோட்டை, முடிவைத்தானேந்தல் பகுதியை சேர்ந்த சொரிமுத்து மகன் மாடசாமி (27) என்பவரை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் இன்று (22. 11. 2024) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு