உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் வேகமாக சென்ற கார் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், ஸ்கூட்டரில் சென்ற இரண்டு இளைஞர்கள் காயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார், நிற்காமல் சென்றது. அத்துடன், காரின் பானட்டில் சிக்கிய ஸ்கூட்டரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் தீப்பொறி பறக்க இழுத்துச் சென்றது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார், காரை விரட்டிச் சென்று பிடித்தனர். தொடர்ந்து, கார் ஓட்டுநர் சந்திரபிரகாஷை போலீசார் கைது செய்தனர்.