காஞ்சிபுரம் அருகே தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணையை, மனைவி ஊற்றிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் கணவர் தினசரி ரகளையில் ஈடுபட்டு வந்ததால் இந்த விபரீத முடிவை மனைவி எடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மனைவியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.