சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். தனது தாயிற்கு சரியான மருத்துவம் பார்க்காததால் இதை செய்ததாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனக்கு ஜாமின் வழங்க கோரி விக்னேஷ் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது அந்த மனுவுக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.