வெள்ளி அருவி (Silver Cascade Falls) திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லும் வழியில், 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கொடைக்கானல் ஏரி மற்றும் கரடிச்சோலை அருவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழை நீரும் ஒன்றாக சேர்ந்து வெள்ளி அருவியாக கொட்டுகிறது. அருவியில் இருந்து வெளியேறும் நீர், ஆறுகண் மதகு வழியாக புலிச்சோலைக்குள் பாய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.