9 குழந்தைகள் பெற்று கொண்டபோதும், மேலும் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்புவதாக சீனாவை சேர்ந்த ஜவோ - தியான் தம்பதி தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு பிறந்த குழந்தைகளில் 7 பேர் வெவ்வேறு ராசிகளையும், இருவர் ஒரே ராசியையும் கொண்டுள்ள நிலையில், சீன சாஸ்திரத்தின்படி 12 ராசிகளை குறிக்கும் வகையில் குழந்தைகளை பெறப்போவதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களின் இந்த செயல் இணையத்தில் வைரலாகிவருகிறது.