"அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கொலைகாரப் பாவிகள். அவர்களின் குடும்பத்தினரின் 80 லட்சம் வாக்குகளால்தான் நாம் தோற்றோம்" என தஞ்சையில் நடந்த அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் 22 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றதாக நினைத்தேன், ஆனால், தபால் ஓட்டுகள் மூலம் 5000 ஓட்டுகள் குறைந்தது 17,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றிபெற்றேன் என கூறியுள்ளார்.