கேரள மாநிலம் கொல்லம் சாத்தனூர் சர்வீஸ் கூட்டுறவு வங்கி அருகே நேற்று (நவ.21) காலை 9.10 மணியளவில் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பைப்லைன் உடைந்து பூமியை பிளந்துகொண்டு தண்ணீர் ஆர்ப்பரித்து வெளியேறிய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. பைப்லைனில் அழுத்தத்தை சரிபார்த்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. பின்னர் ஊழியர்கள் மோட்டாரை அணைத்ததால் நீர் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி சேரும் சகதியுமாக ஆகி போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டது.