தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது இதன் காரணமாக விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை துவங்கியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் விளாத்திகுளம் கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி விவசாயமாக உளுந்து, பாசி, மக்காச்சோளம், கடலை , உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.
மேலும் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றுப் பாசன பகுதிகளில் விவசாயிகள் நெல் விவசாய பணிகளை துவங்கியுள்ளனர்
விவசாயத்திற்கு முக்கிய தேவையாக கருதப்படும் யூரியா மற்றும் டிஏபி பொட்டாஸ் உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடு தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையாக உள்ளது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் உரங்கள் உரிய இருப்பு வைக்காதால் விவசாயிகளுக்கு கடுமையான உர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் வேளாண்மை துறை தமிழக அரசு உடனடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உர தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.