கோவில்பட்டி - Kovilpatti

தூத்துக்குடி: ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்துக்கு எதிராக ஆட்சியரிடம் மனு

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் கோவில்பட்டி காந்தி நகரில் அமைந்துள்ள அரசுப் பள்ளி மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து இன்று(அக்.14) தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வேட்டையன் திரைப்படத்தில் கோவில்பட்டி பள்ளி மற்றும் மாணவ மாணவிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் உள்ள காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். திரைப்படத்தில் இந்த காட்சிகளை அமைத்ததற்காக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியும், மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் இசக்கி ராஜா தலைமையில் மனு அளிக்கப்பட்டது. உடனடியாக இந்த அவதூறு காட்சிகளை வேட்டையன் திரைப்படத்திலிருந்து நீக்காவிட்டால் வேட்டையன் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் திரையரங்குகளை முற்றுகையிட்டு தமிழக முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அங்கு கூடியிருந்தவர்கள் தெரிவித்தனர்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా