தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பழமை வாய்ந்த மந்தித்தோப்பு ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் குரு சித்தர் பீடத்தில் துர்காஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதில் கணபதி பூஜை கும்ப பூஜை துர்கா மூல மந்திர ஹோமம் பூர்னாஹீதி தொடர்ந்து துர்க்கை மற்றும் பூமாதேவிக்கு பால் தயிர் இளநீர் திரவிய பொடி உள்ளிட்ட 11 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.