மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயனாளர்கள் மானியத்தை எளிமையாக பெறுவதற்கு கூப்பன் முறையை அறிமுகம் செய்யவுள்ளது. இந்தக் கூப்பன் மூலம், வீடு வாங்குவோருக்கான மானிய தொகையை, பணமாக்கக் கூடிய கூப்பன்களாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுவருவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், இது குறித்தான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.