சர்வதேச பெண் குழந்தைகள் தின வாகன பிரச்சாரம்: அமைச்சர்

72பார்த்தது
தூத்துக்குடியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரத்தை அமைச்சர் பி. கீதா ஜீவன் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ரோட்டரி டிரெயில் பிளேசர்ஸ் அமைப்பு சார்பில் "பெண் குழந்தைகளைக் காப்போம்" எனும் விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், திமுக மாநகர செயலாளர் ஆனந்த்சேகரன், பகுதிச் செயலாளர் ரவீந்திரன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ், டாக்டர் ப்ளோரா, வழக்கறிஞர் சுவர்ணலதா, மகளிர் அதிகாரம் மையம் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் நிவேதிதா, நிதி கல்வியறிவு வல்லுநர் ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி