தஞ்சாவூர்: நீதிமன்றத்தில் ஆஜராகாத டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட்
தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் பகுதியைச் சேர்ந்த மாயன் (எ) சுந்தரம். இவர் கடந்த 2016ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதேபோல் சுந்தரத்தின் மகன் சுகுமார் கடந்த 2018ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த இரண்டு கொலை வழக்குத் தொடர்பாக திருப்பனந்தாள் போலீஸ் ஸ்டேஷனில், அப்போது இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இவ்வழக்கு விசாரணை கும்பகோணம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுதொடர்பாக, வழக்கின் விசாரணைக்கு, சரவணனுக்குப் பலமுறை சம்மன் அனுப்பியும், ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில் மீண்டும் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. தொடர்ந்து பலமுறை இந்த வழக்கு விசாரணைக்கு இன்ஸ்பெக்டராக இருந்த சரவணன் ஆஜராகாததால், வழக்கைவிசாரித்து நீதிபதி ராதிகா, விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளர் சரவணனைப் பிடிக்கப் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டராக இருந்த சரவணன், தற்போது நீலகிரி மாவட்டம் தேவாலையச் சேர்ந்த டி.எஸ்.பி.யாகப் பணியாற்றி வருகிறார்.