தஞ்சை: ஆதீனத்தை வெளியேற்றி கேட்டை இழுத்துப்பூட்டிய கிராம மக்கள்

54பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா சூரியனார் கோவிலில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு சர்ச்சை ஏற்படுத்திய சூரியனார் கோவில் சிவவாக்கிய யோகிகள் ஆதீன மடாதிபதி மகாலிங்க பரமாச்சாரியார் சுவாமிகள். ஆதீனம் இந்த மடத்தை விட்டு வெளியேற வேண்டும் என அப்பகுதி மக்கள் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து மடத்திலிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மற்றொரு தரப்பினர் மடத்தை விட்டு ஆதீனம் வெளியேறக் கூடாது என இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த சர்ச்சையில் மடத்தின் மடாதிபதி மடத்திலிருந்து வெளியே வந்து வேறொரு பகுதியில் அமர்ந்துள்ளார். மடத்தில் இருந்த சொத்துக்கள் எவ்விதமான அசம்பாவிதம் ஏற்படக் கூடாது என்ற காரணத்தினால் வெளியே வந்ததாக கூறியுள்ளார். மேலும் இந்த மடத்தின் நடவடிக்கைக்கு இந்து அறநிலையத்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறதோ அதற்கு நான் கட்டுப்படுவேன் என மடாதிபதி தெரிவித்தார். அப்பகுதி மக்கள் ஒரு தரப்பினர் அந்த மடாதிபதி நீங்கள் மடத்திற்குள் செல்லுங்கள் என கூறிவருகின்றனர். வெளியேற வேண்டும் என ஒரு தரப்பினரும் உள்ளே இருங்கள் என மற்றொரு தரப்பினரும் அங்கு கூடி சலசலப்பு ஏற்படுத்தியுள்ளனர். இதனால் அங்கு காவல்துறையினர் அமைதியை ஏற்படுத்த இரண்டு தரப்பையும் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி