கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் கண்ணன் என்பவர் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து, கண்ணனை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த கொலையாளி நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கறிஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.