ரயில் மறியலில் ஈடுபட்டதாக வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜர்

71பார்த்தது
ரயில் மறியலில் ஈடுபட்டதாக வழக்கு: நீதிமன்றத்தில் அமைச்சா் கோவி செழியன் ஆஜா்
ரயில் மறியலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்டோா் நேற்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

ஜல்லிகட்டுக்கு விதித்த தடையை மத்திய அரசு நீக்க கோரி 2017-ஆம் ஆண்டு ரயில் மறியலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்டோா் திங்கள்கிழமை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

கடந்த 2017- ஆம் ஆண்டு ஜல்லிகட்டு மீதான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. கும்பகோணத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தற்போதைய அமைச்சா் கோவி. செழியன், எஸ். கல்யாணசுந்தரம் எம். பி. , க. அன்பழகன் எம். எல். ஏ, துணை மேயா் சு. ப. தமிழழகன் உள்ளிட்டோா் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமை கும்பகோணம் குற்றவியல் நடுவா் மன்றத்தில் வந்தது. அப்போது அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்டோா் நீதிமன்றத்தில் ஆஜராகினா். வழக்கை விசாரித்து நீதிபதி ஆஜரானவா்களுக்கு குற்றப்பத்திரிக்கை வழங்கினாா்.

அதன்பிறகு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அமைச்சா் உள்ளிட்டோா் நீதிமன்றத்தில் ஆஜரானதால் ஏராளமான திமுகவினா் திரண்டு வந்தனா்.

டேக்ஸ் :