இந்திய ஜனநாயககட்சி தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

79பார்த்தது
இந்திய ஜனநாயக கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள், கட்சியினர் ஆலோசனைக் கூட்டம், பேராவூரணி தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் எஸ். பி. ஜி. பச்சமுத்து தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் ஸ்டீபன் ராஜ் முன்னிலை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர்கள் அனந்த முருகன், உதயசூரியன், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் லீலாபாய், மாநில போராட்டக்குழு செயலாளர் சிமியோன் சேவியர் ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, இன்றைய அரசியல் நிலவரம், எதிர்காலத்திட்டம் குறித்து பேசினர்.
தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மாநில செயற் குழு உறுப்பினர் ராஜேந்திரன்,
மாவட்டச் செயலாளர் 
பழனிவேல்,   மாவட்ட இளைஞரணி வெங்கட்ராமன், பேராவூரணி தொகுதி பொறுப்பாளர் காகோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, ஒன்றியத் தலைவர் செல்வகுமார் நன்றி கூறினார்.
கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, வரவுள்ள சட்டமன்ற தேர்தல், கிளை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி