தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேசுவரம் வேங்கடாசலபதி கோயில், பூதேவி சமேத ஒப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
முன்னதாக வியாழக்கிழமை இரவு பகவத் பிரார்த்தனை, அனுக்ஞை சேனை முதல்வர் புறப்பாடு தொடங்கியது. வெள்ளிக்கிழமை த்வஜா ரோஹனம் கொடியேற்றம் நடைபெற்றது. ஏராளமான ஆண் பெண் பக்தர்கள் கொடியேற்றத்தில் கலந்து கொண்டனர். பூதேவி சமேத ஒப்பிலியப்பனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது. இரவு தாயாருடன் இந்திர விமானத்தில் பெருமாள் உற்சவம் நடைபெறுகிறது.
இரண்டாவது நாளகா சனிக்கிழமை வெள்ளிப் பல்லக்கில் உற்சவமும், மாலை புன்னை மரத்தில் பெருமாள் தாயார் தோளுக்கினியான் உற்சவத்துடன் தொடர்ந்து அக். 13 வரை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்குழு, நிர்வாகத்தினர் செய்தனர்.