உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்று தொகுதிக்கு வருகை தந்த கோவி. செழியனுக்கு மாவட்ட எல்லை அணைக்கரையில் உற்சாக வரவேற்பு
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி. செழியன் கடந்த சில தினங்கள் முன்பு தமிழக அமைச்சரவை மாற்றத்தில் உயர் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்று திருவிடைமருதூர் தொகுதிக்கு வருகை தந்தார். மாவட்ட எல்லையான அணைக்கரையில் திரண்ட திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் 101 நாதஸ்வரம், 101 தவில் விடுவான்களின் மங்கள இசை நிகழ்ச்சியோடு, பட்டாசு, வான வேடிக்கைகளோடு உற்சாக வரவேற்பளித்தனர். அமைச்சர் கோவி. செழியன் அணைக்கரையில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். அப்போது ஆளுயர பிரம்மாண்ட மாலை அணிவித்தும், கிரீடம், சால்வைகள் அணிவித்தும் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் கல்யாணசுந்தரம் எம்பி, முன்னாள் எம்பி ராமலிங்கம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.