இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (அக். 6) பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை காண லட்சக்கணக்கான மக்கள் கூடிய நிலையில் உடல்நலக்குறைவு மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.