கும்பகோணம் அரசு கல்லூரி மைதானத்தில் இறங்கிய மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின்கட்காரி
தஞ்சாவூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை பணிகளை ஆய்வு செய்ய கும்பகோணம் அரசு கல்லூரி மைதானத்திலுள்ள ஹெலிபேடு தளத்தில் வெள்ளிக்கிழமை காலையில் 10: 33 மணிக்கு இறங்கினார் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின்கட்காரி.
தஞ்சாவூரிலிருந்து சென்னை செல்லும் புறவழிச்சாலையை ஆய்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கும்பகோணம் வந்த மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின்கட்காரி திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கும்பகோணம் அரசு கல்லூரி மைதானத்தில் உள்ள ஹெலிபேடு தளத்தில் இறங்கினார்.
அங்கு அவரை முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், திமுக மாவட்ட செயலர் எஸ். கல்யாணசுந்தரம் எம். பி. , கே. அன்பழகன் எம்எல்ஏ, துணை மேயர் சு. ப. தமிழழகன், பாஜக மாநில செயலர் கருப்பு முருகானந்தம், மாவட்ட செயலர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அங்கிருந்து காரில் ஏறி நாதன் கோயிலில் உள்ள ஜெகந்நாதப்பெருமாள் கோயிலுக்கு சென்றார்.