அமைச்சர் கோவி செழியன் பேசுகையில்திராவிட மாடல் ஆட்சி என்பது எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் ஏழை குடும்பத்தில் பிறந்த தொண்டனை உயர்கல்வித்துறை அமைச்சர் ஆக்கியது தான், கல்வி என்றால் நீ பயிலக் கூடாது, கல்வி என்ற சொல் உன் காதில் கேட்டாலே காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவேன் எனும் மனுதர்மக் கொள்கைக்கு பதிலளிக்கும் வகையில் எந்த சமுதாயத்தில் பிறந்தவர்கள் கல்வி பயிலக் கூடாது என்று சொன்னார்களோ? இந்த சமுதாயத்தை சேர்ந்த என்னை உயர் கல்வித்துறை அமைச்சர் ஆக்கியது திராவிட மாடல் ஆட்சியாகும். ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள பட்டியலின மக்களை காக்கக்கூடிய காவல் அரணாக முதல்வர் விளங்குகிறார் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டாகும். 50 ஆண்டுகாலம் இல்லாத சாதனையை உயரிய துறையான உயர்கல்வித்துறையில் பட்டியல் இனத்தைச் சார்ந்தவரை அமைச்சராக்கி வரலாற்றுச் சாதனையை முதல்வர் புரிந்துள்ளார் எனவும், உயர்நீதிமன்ற நீதிபதியாக பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் இடம்பெற வேண்டும் என பெரியாரும், அண்ணாவும் நினைத்ததை தலைவர் கலைஞர் நிறைவேற்றினார். அந்த அடிப்படையில் உயர்கல்வி துறையில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பளித்தது முதல்வர் தளபதி அவர்களின் செயல் திராவிட மாடலுக்கு எடுத்துக்காட்டாகும். முதல்வர் தளபதி என்ன நினைக்கிறாரோ துணை முதல்வர் உதயநிதி என்ன நினைக்கிறாரோ அதனை நிறைவேற்றும் சேவகனாக என்றும் பணியாற்றுவேன் எனவும் கூறினார்.