திருவிடைமருதூர் அருகே சனி பகவான் கோயிலில் யாகம் நடத்திய ஜப்பானியர் இந்தியாவிலேயே தமிழகம் ஆன்மீக பூமியாக உள்ளது என தெரிவித்தனர்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருநறையூரில் சனி பகவான் குடும்பத்துடன் அருள் பாலிக்கும் ராமநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கு எங்குமே காண முடியாத வகையில் காக வாகனம் கொடிமரம் பலி பீடம் என அமைந்துள்ள இங்கு சனி பகவான் ஜேஸ்டா தேவி மந்தா தேவி என இரு மனைவியர், மாந்தி குளிகன் என இரு புதல்வர்களுடன் குடும்ப சகிதமாக தசரதருக்கு காட்சி கொடுத்தவாறு அருள் பாலிக்கிறார். இங்கு ஜப்பானியர் என்று வருகை தந்து சனி பகவானுக்கு விசேஷ யாகம் நடத்தி மகாபிஷேகம் செய்து மந்திரங்கள் ஓதி ஆத்மார்த்தமாக வழிபாடு செய்தனர். இங்கு தரிசனத்திற்கு வந்த பொதுமக்களும் ஜப்பானியர் வழிபாட்டை பார்த்து வியந்தனர். தரிசன முடிந்ததும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹருவோ சேட்டோ, இந்தியாவிலேயே தமிழ்நாடு ஆன்மீக பூமியாக திகழ்கிறது இங்குதான் அதிகமான முனிவர்கள், சித்தர்களின் சமாதிகள் உள்ளது. இந்திய நாட்டின் கலாச்சாரமும் சனாதன தர்மமும் வேதங்களும் சிறப்பு பெற்றது. இதனால் நான் ஜப்பானிலிருந்து பலமுறை இங்கு வந்துள்ளேன். நான் வரும்போது திருநறையூர் சனி பகவான் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். தமிழ்நாட்டிற்கு வந்து செல்வது மிகவும் மன நிறைவை தருகிறது என தெரிவித்தார்.