எடையூரில் நீர்நிலைகளை பார்வையிட்ட பி. ஆர். பாண்டியன்
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் காவிரி டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதியான முத்துப்பேட்டை ஒன்றியத்தில் மாங்குடி, மருதவனம், எடையூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வடிகால்களில் வெங்காய தாமரை மண்டி பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால் சிறு மழை பெய்தால் கூட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாகுபடி பாதிக்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் கோட்டூர் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட ஒன்றியங்களில் வெள்ள நீர் முழுமையும் முத்துப்பேட்டை பகுதியில் மரைக்காகோறையாறு, பழம் பாண்டியாறு மூலம் வெள்ள நீர் கடலில் சென்று வடிய வேண்டும். இந்த ஆறுகள் முழுமையும் வெங்காயத்த தாமரையும், துளிர் செடிகளும் மண்டி ஒட்டுமொத்தமாக நீர்வழிப்பாதைகள் அடைபட்டு உள்ளது. இதனால் மிகப்பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பேரபாயம் உள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் அவசரகால தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது கைவிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது தாயில்லா பிள்ளையாக பரிதவித்து வருவது வேதனை அளிக்கிறது. எனவே உடனடியாக முதலமைச்சர் நேரில் தலையிட்டு காவிரி டெல்டாவிற்கு அமைச்சர்கள் குழுவையும், அதிகாரிகளையும் அனுப்பி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.