திருவாரூர்: மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா; குடியரசு தலைவர் வருகை
நன்னிலம் அருகே நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நவம்பர் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொள்ள வேண்டும் என தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். கிருஷ்ணன், நேரடியாக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி நடைபெறும் மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொள்ள உள்ளார். இந்த விழாவில் டாப் ரேங்கிங் எடுத்த 33 மாணவர்களுக்கு தங்க மெடல்களையும், பட்டங்களையும் குடியரசுத் தலைவர் வழங்க உள்ளார். மேலும் பல மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள நூறு சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒரு பல்கலைக்கழகமாக திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.