பழமை வாய்ந்த மகாகாலநாதர் கோவிலில் நெய் குல தரிசனம்

76பார்த்தது
நன்னிலம் அருகே கோவில்திருமாளம் கிராமத்தில் காவிரி தென்கரைத்தளங்களில் ஒன்றான அம்பர் மாகாளம் என்ற தளமாகிய மாகாளி அன்னையும் வாசுகி நாகமும் தோஷ நிவர்த்தி பெற்ற தலமாக சொல்லப்படும் ஸ்ரீ மகா காளநாதர் சமேத பயசாம்பிகை ராஜமாதங்கி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நெய்குல தரிசனம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. உலக மக்கள் நலம் பெற வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்று, மகாகாலநாதர் மற்றும் பயசாம்பிகை ராஜமாதங்கி அம்மனுக்கு 108 லிட்டர் பால் மஞ்சள் இளநீர் சந்தனம் போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

அதனைத் தொடர்ந்து பயசம்பிகை ராஜமாதங்கி அம்மன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து அம்மனுக்கு எதிரே 15 அடி நீளம் 4 அடி அகலத்திற்கு வாழை இலைகளை வைத்து அதன் மேல் தென்னை ஓலைகளை வைத்து 15 அடி நீளமும் மூன்று பாகமாக பிரித்து முதல் பாதத்தில் 100 கிலோ சக்கரை பொங்கல் அடுத்தாக புளிசாதம் மூன்றாவதாக தயிர் சாதம்108 வடை வைத்து சர்க்கரை பொங்கல் மேலே 50 லிட்டர் நெய்யை ஊற்றி பயசாம்பிகை ராஜமாதங்கி அம்மன் முழு உருவமும் படையளில் காட்சியளித்தார். இந்த பயசாம்பிகை ராஜமாதங்கி அம்மனின் நெய்குல தரிசனத்தை கண்டால் மறுபிறவி என்பது கிடையாது என்பது ஐதீகமாக சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி