நன்னிலம் அருகே வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து

53பார்த்தது
நன்னிலம் அருகே சலிப்பேரி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் கவிதா தம்பதியினர் காலணி வீட்டில் கடந்த 30 வருடங்களாக வசித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு சுபர்ணா வயது 13 சுபஸ்ரீ வயது 10 என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் வழக்கம் போல பாலகிருஷ்ணன் கவிதா இருவரும் கூலி வேலைக்கு சென்றுள்ளனர். அதேபோல சுபர்ணா சுபஸ்ரீ ஆகிய இருவரும் பள்ளிக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கூலி வேலைக்குச் சென்ற தம்பதியினர் இருவரும் வேலை அதிகமானதால் மாலை 7 மணி வரை வேலை பார்த்துக் கொண்டுள்ளனர். மூத்த மகள் சுபர்ணா பள்ளியை முடித்துவிட்டு தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். இளைய மகள் சுபஸ்ரீ டியூசன் சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு 7மணி அளவில் பாலகிருஷ்ணனின் சகோதரர் குழந்தைகள், பாலகிருஷ்ணன் வீட்டில் உணவு உண்ணும் போது மேற்கூறையில் உள்ள கான்கிரீட் பெயர்ந்து சிறிய கல் சாப்பிடும் தட்டில் விழுந்தவுடன் இரு குழந்தைகளும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்துள்ளனர். அப்போது திடீரென மேற்கூரை முழுவதும் பெயர்ந்து கீழே விழுந்தது. தகவல் அறிந்த தம்பதியர் வந்து பார்த்த போது மேற்கூரை முழுவதுமாக பெயர்ந்து விழுந்ததில் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் நாசமாகிவிட்டது. தமிழக அரசு உடனடியாக எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கவிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி