திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த 2010-11ம் ஆண்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டு அதனைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது பாதாள சாக்கடை திட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளத்தின் மேல் கரையில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை அமைக்கும் பணியினை தமிழக தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். ஆய்வின் போது நகராமன்ற தலைவர் மன்னை சோழராஜன், திமுக நகர செயலாளார் வீரா. கணேசன் உள்ளிட்ட திமுகவினர் உடனிருந்தனர்.