போதைப்பொருள் கடத்தலில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கிற்கும் தொடா்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் அலிகான் துக்ளக் ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சிறப்பு கோர்ட்டில் இன்று (டிச.24) காலை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சென்னை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு கோர்ட்டு மனு மீதான விசாரணையை வருகிற 26-ந் தேதி தள்ளி வைத்து உத்தவிட்டுள்ளது.