ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. கடந்த மாதம் இப்படத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில், "அமரன் படன் நாம் அறிந்த ஒரு மனிதரைப் பற்றிய கதை. ஆனால் இதேபோல் நிறைய கொண்டாடப்படாத மனிதர்கள் இந்த சமூகத்தில் இருக்கிறார்கள். அப்படியான ஒரு நபரின் வாழ்க்கையை தான் நான் படமாக எடுக்க இருக்கிறேன். இப்படம் ஒரு சர்வைவல் டிராமாவாக இருக்கும் " என ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.